Saturday, August 7, 2010

எங்கள் தேசம் பத்திரிகையில் 2010 ஆகஸ்ட் முதலாவது வார இதழில் வெளியான எனது பேட்டி!


1. உங்களைப் பற்றிய ஓர் அறிமுகம்? 

என் ஆரம்ப காலம் தொட்டே 'வெலிகம ரிம்ஸா முஹம்மத்| என்ற பெயரில் எழுதி வரும் நான் வெலிகம கவிக்குயில், வெலிகம நிலாக்குயில் என்ற புனைப்பெயர்களிலும் எழுதிவருவதுண்டு. தற்போது தலை நகரத்தில் தங்கியிருந்து என் இலக்கியப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். கணக்கீட்டுத் துறையில் MAAT, MIAB ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள நான்; சுமார் 04 வருட காலங்களாக தனியார் கம்பனியில் உதவிக் கணக்காளராக கடமையாற்றி வருகிறேன். 


2. எழுத்துத் துறை ஆரம்பம் குறித்து...? 

1997 - 1998 காலப்பகுதியில் Sooriyan F.M, Shakthi F.M ஆகிய வானலைகளில் என்னுடைய கவிதைகள் தவழ்ந்தன. 2004 - 2005 காலப்பகுதியில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை 'மாதர் மஜ்லிஸ்| நிகழ்ச்சிக்கு பிரதிகள் தயாரித்தது மாத்திரமன்றி குரல் கொடுத்தும் வந்துள்ளேன். மேலும் 2004ம் ஆண்டுக்கு பிறகே பத்திரிகை சார் துறையில் என் ஆர்வம் விழுந்தது. முதன்முதலில் தினமுரசு பத்திரிகையில் 'நிர்மூலம் | என்ற கவிதை பிரசுரமானதைத் தொடர்ந்து என் ஆர்வம் மேலும் தீவிரமடைந்தது. இன்று வெளிவரும் பத்திரிகைகளான வீரகேசரி, தினகரன், தினமுரசு, தினக்குரல், சுடர் ஒளி, நவமணி, மித்திரன், விடிவெள்ளி மற்றும் சஞ்சிகைகளான செங்கதிர், ஞானம், நிஷ்டை, ஜீவநதி, படிகள் என்பவற்றுடன் இஸ்லாமிய சஞ்சிகைகளான அல்ஹஸனாத், அஸ்ஸகீனஹ், அல்லஜ்னா என்பவற்றிலும் கவிதைகள் களம் கண்டுள்ளன. அத்துடன் இந்திய சஞ்சிகையான இனிய நந்தவனத்திலும் கவிதைகள் பிரசுரம் பெற்றுள்ளன. அதே போல் www.rimzapoems.blogspot.com, www.rimzapublication.blogspot.com , www.bestqueen12.blogspot.com என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறேன். 


3. பெண் எழுத்து, பெண் மொழி, பெண்ணியம் பற்றிய உங்கள் கருத்து என்ன? 

பெண் எழுத்து என்ற அடிப்படையில் நோக்கும் போது பொதுவாக பெண்கள் தமது பிரச்சனைகள் மற்றும் வாழ்வியல் குறித்தும், அதில் ஏற்படும் சம்பவங்களையுமே புடம் போட்டுக்காட்ட விளைகிறார்கள். ஆனாலும் எழுத்து என்ற அடிப்படையில் பொதுவாக நோக்கும் போது பெண் எழுத்து, ஆண் எழுத்து பெண் மொழி, ஆண் மொழி என்ற கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை என்று தான் கூற வேண்டும். 


4. உங்களுடைய நூல் வெளியீடுகள் பற்றியும் அவற்றின் துறை பற்றியும் கூறுங்கள்? 

கணக்கீட்டுத் துறையில் இதுவரை 03 நூல்களை வெளியிட்டுள்ளேன். அவை... 1. வங்கி கணக்கிணக்கக் கூற்று 2. கணக்கீட்டுச் சுருக்கம். 3. கணக்கீட்டின் தெளிவு அத்துடன் தென்றலின் வேகம் என்ற கவிதை நூலொன்றையும் இலக்கியத்துறையில் வெளியிடடிருக்கிறேன். முறிந்த சிறகுகள் என்ற இன்னொரு கவிதைத் தொகுப்பையும் எதிர்காலத்தில் வெளியிட உத்தேசித்துக் கொண்டிருக்கிறேன். 


5. உங்களது படைப்புகளுக்கான வாசகர் மட்டம் எந்தளவில் உள்ளது?

கணக்கீட்டு நூல்கள் பாடசாலை மட்டத்தில் மட்டுமல்லாமல் பட்டப்படிப்பை கணக்கீட்டுத் துறையில் மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் எழுதப்படிருப்பதால் அவை நல்ல வரவேற்பைப் பெற்றன. அத்துடன் கணக்கீட்டு உத்திகள், அடிப்படை விடயங்கள், விளக்கங்கள் என்பன தெளிவாக சொல்லப்பட்டிருப்பதால் இதற்குத் தனியானதொரு வரவேற்பு இருக்கிறது என்று தான் பிரபல்யம் வாய்ந்த பல கணக்கீட்டு ஆசிரியர்கள் பல பிரதேசங்களிலிருந்தும் கருத்து தெரிவித்தார்கள். அண்மையில் வெளியிட்ட தென்றலின் வேகம் என்ற என்னுடைய கவிதைப்புத்தகத்தைப் பற்றிய நண்பர்களின் கருத்து என்னவென்றால் என்னுடைய கவிதைகள் கடின வசனங்களற்று சந்ந ஒழுங்கில் இருப்பதால் இவை வாசிக்க இலகுவாக இருப்பதாகவும், தொகுப்பு முழுவதையும் வாசித்து முடிக்க வேண்டும் என்ற ஆவலையும் ஏற்படுத்தியதாகக் கூறினார்கள். 


6. உங்களது கவிதைகளுக்காக கருப்பொருள்களை எங்கிருந்து பெற்றுக் கொண்டீர்கள்?

நான் வாழ்ந்த சூழலும், என் வாழ்வில் கிடைத்த அனுபவங்களும், நான் சந்தித்த நபர்களில் சிலரின் இரட்டை வேடங்களும் என்னை எழுத வேண்டும் என்ற வெறியை உருவாக்கின. அது போல எனது தாயாரின் இழப்பை எண்ணியெண்ணி என் கண்ணீர் வற்றிய பிறகு பேனாவின் மை கொண்டு தான் அழுதேன். அவ்வாறான விடயங்கள் தான் என் கவிதைகளுக்காக கருவை பெற்றுக் கொள்ளச் செய்தது. 


7. நவீன கவிதைகளில் மொழி ரசனை இல்லை என்ற பரவலான குற்றச்சாட்டு நிலவுகிறது. இது பற்றி நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

எல்லோருடைய கவிதைகளுக்கும் இது பொருந்தாது எனினும் இன்று புற்றீசல் போல புறப்பட்டுக் கொண்டிருக்கும் பல கவிதைகள் வெறும் சொற்கோர்வையை மாத்திரம் உள்ளடக்கி எழுதப்படுகின்றன. அவற்றில் மொழிநயம், சந்தம், படிமம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்ட்டிருப்பது மிகக் குறைவாகவே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பத்திரிகையில் பெயர் வர வேண்டும் என்பதற்காக ஏனோதானோ என்று எழுதப்படும் பல விடயங்களையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. அவற்றை கவிதை என்ற வட்டத்துக்குள் உள்ளடக்கலாமா என்பது சந்தேகத்துக்குரியதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. 


8. இலக்கிய அமைப்புக்களில் அங்கத்துவம் வகிப்பதால் ஏற்படுகின்ற சாதகங்கள் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 

முற்போக்கு கலை இலக்கிய,ப் பேரவை இலங்கை முஸ்லிம் கலைஞர் முன்னணி ஆகிய இலக்கிய அமைப்புக்களில் நான் அங்கத்துவம் வகிக்கின்றேன். கணக்கீட்டுத்துறையில் வெளியீட்டு நிறுவனங்களுடன் இணைந்து நான் மூன்று நூல்களை வெளியிட்டேன். இவ்வாறு இருந்தும் இலக்கியத்துறையில் எனது கவிதைத் தொகுப்பான 'தென்றலின் வேகம்' என்ற நூலை தனியாக வெளியிட்டுக்கொள்ள பொருளாதாரம் வாய்ப்பளிக்கவில்லை. இந்த நிலையில் எனக்கு கை கொடுத்தது நான் அங்கத்துவம் வகிக்கும் இலக்கிய அமைப்பான முற்போக்கு கலை இலக்கியப் பேரவை தான். இந்த வகையில் இவ்வாறான அமைப்புக்களில் அங்கத்துவம் வகிப்பதால் பல நன்மைகளை அடைய முடியும். ஆத்துடன் பல கருத்தரங்குகள், கூட்டங்கள் ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு மூத்த எழுத்தாளர்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் கேட்டு நம்மை வளப்படுத்திக் கொள்ள முடியும். 


9. உங்கள் இலக்கிய அமைப்பான Best Queen Foundation பற்றி கூறுங்கள்?

தற்போது Best Queen Foundation என்ற அமைப்பை உருவாக்குவதிலும் அதன் பல்வேறு செயற்திட்டங்களின் கீழ் கவிதைச் சிற்றிதழான பூங்காவனம் என்ற சஞ்சிகயை வெளியிட தீர்மானித்திருப்பதுடன் ஆதற்கான ஆலோசனைகளையும் நடாத்தி வருகிறோம். பெண்களின் குரலாக ஒலிக்க இருக்கும் இச்சஞ்சிகையில் தரமான எழுத்துக்களை உள்ளடக்கியவர்களின் படைப்புக்கள் வெளியிடப்படும். இந்த வெளியீட்டு முயற்சிகளை தனித்து நின்று செயல்படுத்துவது தான் மிகச்சிரமமாக இருக்கிறது. ஆகையால் நல்மனம் கொண்ட தனவந்தர்களின் உதவிகளையும், நன்கொடைகளையும் நாம் எதிர்பார்க்கின்றோம். ஏதிர்காலங்களில் எமது அமைப்பினூடாக இன்னும் பல புத்தகங்களையும் வெளியிட உத்தேசித்துள்ளோம். எமது நிர்வாகக் குழுவில் நானும் சகோதரி தியத்தலாவ எச். எப். ரிஸ்னா, மொரட்டுவ வஸீர், கிளியனூர் இஸ்மத் என்போர்; இருக்கின்றோம். இன்று இலக்கியத்தை எடுத்துக் கொண்டாலும் வேறு தொழில்களை எடுத்துக் கொண்டாலும் ஆண்களின் பங்களிப்பே அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. திருமணத்துக்கு முன்னரும், பின்னரும் இலக்கிய உலகிலிருந்து பெண்கள் தாமாகவே விலகிக் கொள்கிறார்கள். அல்லது அவ்வாறு செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். எனவே தான் பெண்கள் சார்ந்து எமது விளிப்புணர்வு எழுந்துள்ளது. 


10. பெண்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்கள், சவால்கள் என்ன? 

பெண்களைப் பொறுத்த வரையில் அவர்கள் பாரிய பொறுப்புக்களை சுமந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். குடும்பப் பெண்கள், தொழிலுக்குச் செல்லும் பெண்கள் என்று பிரித்து நோக்கினாலும் தினம் தினம் அவர்கள் அனுபவிக்கும் அவஸ்தைகள், சிக்கல்கள் கணக்கில் அடங்காது. எனினும் பல பெண்கள் குடும்பம் என்ற வட்டத்துக்குள் நுழைந்து விட்டால் எழுத்துத் துறையிலிருந்து தாமாகவே விலகிக் கொள்ளும் நிலையும் இல்லாமலில்லை. பல போராட்டங்களுக்கு மத்தியிலும் எழுத்துத்துறையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்; பெண்கள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்களே.

தொடர்புகளுக்கு - 

Rimza Mohamed 
No. 21 E, 
Sri Dharmapala Road, 
Mount Lavinia. 

Mobile- 077 5009 222 

E-mail- poetrimza@yahoo.com 
bestqueen12@yahoo.com 

Website- 
www.rimzapoems.blogspot.com 
www.rimzapublication.blogspot.com 
www.bestqueen12.blogspot.com 
http://www.youtube.com/watch?v=PI9RgYc026Q

7 comments:

  1. edennum veediyile........ eluthennum thoranangal.......

    adhu athanaium idhayathul inikindra karanangal.......

    arumai kavithaigal...........

    assalamu alaikum - NILOFAR NISA

    ReplyDelete
  2. asalamu alaikum sagothari rimsa mohamed
    tangal kavitahigal arumai neenda naal kavithai
    thaahathirku sugamana inimaiyana kulir baanamaga irunthathu......... nandri...... wasalam........

    -nilofar nisa

    ReplyDelete
  3. engal kavithai thozhiku kanivaana salamum nandrium.........!!!!

    ReplyDelete
  4. ungaludan natpu kolla aasai...........
    ithu anbin vendukol......

    nilofar nisa

    ReplyDelete
  5. Thank You Nilofar Nisa.

    You can contact me this two as to continue our Frienship...

    My E mail ID - poetrimza@yahoo.com
    Mobile - 077 5009 222

    ReplyDelete