Friday, February 24, 2012

தினகரன் வாரமஞ்சரியில் 2012 பெப்ரவரி 12 ஆம் திகதி வெளிவந்த எனது ஏடாகூடமான கேள்விகள்

தினகரன் வாரமஞ்சரியில் 2012 பெப்ரவரி 12 ஆம் திகதி வெளிவந்த எனது ஏடாகூடமான கேள்விகள் 

http://thinakaran.lk/Vaaramanjari/2012/02/12/?fn=f12021214

ஏடாகூடமான கேள்விகள்? 

ஏடாகூடம் : மொழி 
 பதில் தருவது: எழுத்தாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் 



கே. ஒரு சிலர் காப்பி அடித்து எழுதி எழுத்தாளர்களாகி உள்ளார்கள். இன்னும் சிலர் காப்பி குடித்த படியே எழுதி எழுத்தாளர்கள் என்ற பெயர் வாங்கி உள்ளார்கள். இன்னும் சிலர் அங்கும் இங்கும் உள்ளதை 'பொறுக்கி' எடுத்து எழுதி எழுத்தாளர்கள் என்ற 'முத்திரையைக்' குத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதில் நீங்கள் எந்த ரகம்? 

ப. காப்பி குடித்துக்கொண்டே எழுதலாம் போலிருக்கிறதே. இதைவிட மற்ற இரண்டும் நமக்கு ஒத்துவராதுங்கோ....

நைசா நழுவிட்டிங்கோ)

கே. தமிழ் அரிச்சுவடியிலுள்ள எழுத்துக்களில் வாசமுள்ள எழுத்து எது? 

ப. 'பூ!' இது கூட தெரியாதா பூ.... 
(தப்பூ என்று சொல்ல முடியாம (வெச்சிட்டீங்களே ஆப்பூ) 


கே. படமெடுத்தாடும் பாம்பை நம்பினாலும் பகட்டாகச் சிரிக்கும் பாவையரை நம்பக் கூடாது என்று சொல்கிறார்களே. இது ஏன்? 

ப. அனுபவப்பட்டவங்க சொல்றாங்க. நாமும் கேட்டுக்க வேண்டியதுதான். (அப்போ அது உண்மைதான்னு சொல்லுங்கோவன்!) 


கே. காதலுக்கும் உங்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று சொல்கிறாரே உங்கள் நெருங்கிய தோழி. அது ஏன்? 

ப. எதுக்குப்பா இந்த ஏடாகூடமான கேள்வி? எவ அவ என் தோழி? என்ன விட்ருங்கப்பா. தப்பிச்சுப் போறேன்.
(ஓ... அப்போ 'அவளா' நீங்க?) 


கே. பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்று ஒரு பழமொழி சொல்கிறார்களே. இதற்கு என்ன பொருள் என்று நீங்களாவது சொல்லுங்கள்? 

ப. எதுவும் அப்படித்தான். நெருங்கிப் பழகினால் அருமை இருக்காது. (என்னாங்க இது.... பாலுடன் எப்படீங்க 'பழக' முடியும்) 


கே. எந்த எழுத்தாளரைப் பார்த்து பொறாமைப் படுகிறீர்கள்?

ப. பொறாமையா? அதுவும் எனக்கா? நான் யாரைப் பார்த்தும் பொறாமைப்படுவதில்லை. என் அகராதியில் பொறாமை என்கிற வசனமே இல்லீங்க. 
(அப்படியா! அந்த அகராதியை எனக்கும் கொஞ்சம் தாங்கோவன் பார்ப்போம்!)


கே. உங்களுக்கு வாய்மை பிடிக்குமா? பேனா மை பிடிக்குமா? 

ப. எனக்கு இரண்டும் பிடிக்கும். அதாவது பேனா மை கொண்டு எழுதுகின்ற வாய்மை பிடிக்கும். 
(அந்தா மாட்டிக்கிட்டிங்கோ! பேனா மை கொண்டு வாய் மை போட முடியாதுங்கோ) 


கே. உருவமில்லாத 'டை' எது? 

ப. இந்த லொள்ளு தானே வேணாங்குறது? அட லொள்ளுன்னா அரட்'டை' தான். (அடடா நீங்கள் நன்றாக குறட்டை விட்டுத் தூங்குவீர்கள் போல் தெரிகிறதே....)


கே. காக்கைக் கூட்டில் குயில் ஏன் முட்டையிடுகிறது? 

ப. அடுத்தவன் சொத்துக்குத்தானே அநேகமானவர்கள் ஆசைப்படுகிறார்கள். குயிலென்ன விதிவிலக்கா? என்ன தான் பண்ண அதற்கு காக்கா கூட்டிலதான் முட்டையிட முடிகிறது. 
(இல்லீங்கோ - இது வேறு விஷயமுங்கோ!) 


கே. இரண்டு வரிகளில் ஏடாகூடமான கவிதை ஒன்று சொல்லுங்கள் பார்ப்போம்? 

ப. 
சில மனைவிகள்! 

அடிமைத் தனத்திலிருந்து தன்னை 
 விடுவித்துக்கொள்ளமுடியாத 
 அப்பாவிக் கைதிகள்! 

 (இது ஏடா கூடமான கவிதை அல்ல ஏமாற்றப்பட்டவர்களின் புலம்பல்)

No comments:

Post a Comment